திமிர்..
வாடா போடா
என கூறுவதில்
வஞ்சி அவள்
வல்லவள்..
உடல் முழுவதும்
அக்னி பிரவேசிப்பது
அவள் கண்களில்
தான் கண்டேன்..
காரிருளும்
கைகட்டும்
மின்னல் ஒளி
அவள் பார்வை..
திமிருக்கு தத்து
பிள்ளையாக பிறந்தவள்..
அதனாலே
என்னவோ
அன்புக்குரியவர்களிடம்
மட்டுமே அதிகம்
பயன்படுத்துகிறார்கள்..