மாணவர்களே மன அழுத்தம் எதற்கு

மாணவர்களே மன அழுத்தம் எதற்கு;
மதிப்பெண் உன் மதிப்பை எடை போடாது,
மதிப் பெண் வாங்கவே பள்ளி செல்லாது;
பாரில் பிறர் மதிக்க பள்ளி சென்று
பயனுடன் படிப்பை தொடர்ந்திடு;
நல்ல பழக்க வழக்கத்தையும் கற்றிடு;
பண்பாட்டை காத்திடு;
மாணவன் நீ மறந்து விடாதே;
மாணவன் நீ மயங்கி விடாதே;
மாணவன் நீ மறைந்து ஒழிந்து விடாதே;
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே
எதார்த்தமாக படி;
ஏன் படித்தோம் என்று இருந்து விடாதே;
நெறிதவறி நடந்து விடாதே;
நேரத்தை வீணடிக்காதே;
எதையும் கருத்தோடு படி;
சாதிக்க சந்தர்பத்தை சரியாக பயன் படுத்திக்கொள்;
சந்தர்ப்ப வாதியாகிவிடாதே;
சந்தர்ப்ப வாதிகளிடம் அடிமையாகி விடாதே;
சாதூர்யமாக இருந்து கொள்;
சாமாத்தியமாக நடந்து கொள்;
வதை முகாங்கள் இல்லை பாடசாலைகள்;
வறியவனுக்கு ஒரு பாடம் வைத்திருப்பவனுக்கு ஒரு பாடம் இல்லை;
மனித சக்தி மந்திர சக்தியில்லை;
மாணவன் சக்தி மகத்தான சக்தி;
மரண ஒலத்திற்கு இல்லை படிப்பு;
மயாண கூடம் ஆக வேண்டாம் பாடசாலை;
படிக்காத மேதைகள் பலர் உண்டு;
அவர்கள் சாதனை பெரிதென்று மனதில் கொண்டு, திடத்தோடு வா
தைரீயமாய் படிக்க வா;
அசிங்கம் செய்பவன் எவனென்றாலும் அவனை அவமானப் படுத்து வோம் வா;
அடுத்து தவறு இழைக்க நினைப்பவனும்
அடங்கிப் போகும் அளவிற்கு பாடம் புகுத்துவோம் வா;
பாடகசாலை அது அறிவுச்சோலை,
படிப்பை பிடிப்போடு படித்திடு;
பாடகசாலையை அன்புச் சோலையாக்கு
அறிவுப் பேழையை திறந்து,
ஆர்வத்துடன் ஆற்றலை வளர்த்திடு;
திறமை தகுதி ஒருவனுக்கே சொந்த மில்லை;
அறியாமை இருளை அகற்றிடு;
அகதி இல்லை நீ,
அடிமையாக அச்சத்துடன் வாழ்ந்திடாது,
உன் கவலையை மறந்து கலைகளை கற்கும்
கல்விக் கூடமாக்கு;
கயவர் வாழும் கூடாறமாக்கிவிடாதே;
கயமைக் குணம் படைத்தவனை கதற கதற விரட்டிவிடலாம்

தேர்வு என்ற பயம் எதற்கு
தேர்வு சுரம் எதற்கு
தேர்ச்சி பெற மாட்டோம் என்றும்
தகுதித்தேர்வுக்கு மதிப்பெண் எடுக்க வில்லை என்றும் தற்கொலை படலம் எதற்கு;
உன் தகுதியை தேர்வு செய்ய தடுமாற்றம் எதற்கு;
உன் தலை எழுத்தை தகுதித் தேர்வு நிர்ணயிப்பதில்லை;

பொதி சுமக்கும் கழுதை யில்லை நீ
புத்தக மூட்டையை பொதியாக சுமந்து செல்லாது
புத்தியை பக்தியாக சுமந்திடு;
புத்தியை தீட்டு;
புரியாததை கேட்டு கற்றிடு;
பொதுத்தேர்வு பொதுவான தேர்வுதான் பொறுப்புடன் எழுதிவிடு;
தேடிக் கற்கும் கல்வியை
தேரளாக நினைத்திடு;
கற்கண்டாய் இனித்திடும் ;
பிடிவாதத்திற்கு படிக்காது,
பிறருக்காக படிக்காது, பிடிப்போடு படி;
வெற்றி உனக்குத் தான்;
கண்ணாமூச்சி இல்லை உன் பள்ளி வாழ்க்கை;
கண்காட்சி அது;
கண்ணும் கருத்துமாய் படி;
கண்டபடி நேரத்தை செலவிழிக்காது, கண்டதை படி பண்டிதனாவாய்;
கருத்துடன் படி, வாழ்வியலில் வாழ்க்கைப் பாடத்தையும் சேர்த்துப் படி,
எதிர் நீச்சல் போடு;
புதிர் போடாதே, புரியவில்லை என்று விடாதே;
எதுவந்தாலும் எதிர்த்து நில்;
எரிந்து விழாதே;
துடிப்பான இளமை இருக்க
தயக்கம் எதற்கு, தடுமாற்றம் எதற்கு;
நீயே ஒரு தீப்பொறி,
உன்னைத் தீண்ட யார் உலர்;
கோழையாகாதே;
ஏழை என்றால் ஏமாந்தவன் இல்லை;
கொடுத்து வாங்குவதற்கு இல்லை கல்வி;
கெடுத்து வாழங்கு வதற்கு இல்லை கல்வி;
கெடுதலை சொல்லித் தருவதற் இல்லை பள்ளிக் கூடம்;
பள்ளிக் கூடம் பணம் பறிக்க இல்லை;
பள்ளிக் குழந்தைகள் மீதான வன்முறை நிறுத்து;
பள்ளிக் கூடம் உன் இச்சை பசியை தீர்க்க இல்லை
பள்ளிக்கூடம் மாணவப் பறவைகள் சிறகடித்து படிக்க வந்த வேடந்தாங்கள்,
மாணவ சிறார்களை சிறை படுத்தாதே, சின்னாம் பின்னம் ஆக்காதே,
மனிதனே உன் பாலுணர்சி பசிக்காக பச்சிலங் குழந்தைகளின் கற்பை புசிக்க நினைக்காதே;
கலைகளைத் தருபவன் அந்த கலைவாணிக்கே சமானம்;
கயவனாகாதே, உன் காம பசியை தீர்க்க, கல்விக் கூடத்தை பயன் படுத்தாதே;
மாணவ மணிகளே, மாணிக்கங்களே
மாசு மருவற்ற உள்ளங்களே;
கோழையாகாதே
கொடியவனைப் கண்டு பயப்படாதே,
கொடுமை நடக்க விடாதே;
தேவையில்லாத முடிவைத் தேடாதே;
கோழையாய் இருக்கும் வரை
கொடுமை படுத்துபவன் இருக்கத்தான் செய்வான்;
தைரியத்தை வளர்த்து வா;
தன்மானத்துடன் வாழ்திட வா;
படர்ந்த உலகில் படைத்து சாதிக்க பல உள்ளது;
படிப்பு என்பது உன் பாத செருப்பு;
வாழ்வில் பக்குவமாக நடக்க உதவும் அது;
படிப்பு என்பது உனது அங்கிகாரம்;
படிப்பு என்பது படிப்பினைத் தருவது;
படிப்பென்பது பல கலைகளையும் கற்க உதவுவது;
தடுமாறாதே, தவறான முடிவைத்தேடாதே;
தவறியும் பயத்தை வளர்க்காதே;
தைரியமாக உன் பெற்றோர்களிடம் கூறு,
நீ சாதிக்கப் பிறந்தவன்/ள்;
சோதிக்காதே என்று கூறு;
சொந்த விருப்போடு வாழ வழி விடச் சொல்லு;
உனக்கென்று ஒரு உலகை படைக்க முயலு;
உன் விருப்பப்டி, விரும்பும் துறையில்சாதிக்க முயலு;
கல்வி ஞானத்துடன் கேள்வி ஞானத்தையும் கற்று விடு
கூட்டாய் சேர்ந்து படித்திடு;
குழும படிப்பை தொடர்ந்து விடு;
முயற்சி எடு பயிற்சி எடு;
முடியாதது என்று ஒன்றும் இல்லை;
ஆசானை வணங்கிடு;
ஆலோசனையை ஏற்றுக்கொள்;
ஆசான் அசிங்கப் பார்வையில் பார்த்தால்,
அவனை பிறர் அருவெறுக்கும் படி செய்து விடு;
பெண்ணே பேடியில்லை நீ;
தும்பியாய் இரு; நம்பி இரு;
படிப்பறையை பாச அறையாக்கு;
தேனிக்களைத் தேடி மது வருவதில்லை;
எறும்பைத்தேடி உணவு வருவதில்லை;
எல்லாம் தெரிந்த நீ, எட்டு நடைபோடு,
ஏற்றம் பெற, அறிவைத் தேடி ஓடு;
ஆண்மிகத்தையும் வளர்த்திடு,
தேள் தீண்ட வருபவனை, கொட்டாமல் விடுவதில்லை;
விளையாடும் வயதில் விபரீத முடிவதெற்கு;
வீணான மன உலச்சலும் எதற்கு,
வீரம் விவேகம் இருக்க, அருவெறுப்பு எதற்கு;
வெற்றித் திருமகள் உன் பக்கத்தில்,
விடிவும் உன் கையில்;
விடுதலை வாழ்வு வாழ கற்றிடு;
விஷமம் செய்பவனை,
விஷப் பூச்சை அடிப்பதுபோல்
அடித்து விரட்டி விடு;
பாடகசாலையை அடிமைச் சிறையாக்கி விடாதே;
பயபக்தியுடன் வாழ்திடு;
பயம் எதற்கு,
உன் மாணவப்படை இருக்க
படுத்து ஏங்குவது எதற்கு;
பாடாய் படுத்துபவனை தடுத்திட, படுத்தி எடுத்திட, மாணவப் படையிருக்கு;
தடுமாற்றம் எதற்கு;
தயங்கி தயங்கி வாழ்வதுஎதற்க்கு ;
எழுந்துவா, எழுச்சி பெற்று வா;
புதுமையில் புரட்சி படைக்க வா;
முயன்றவன் தோற்ற தில்லை;
சாதிக்க பல வழிகள் இருக்க,
சவாலை ஏற்று சரித்திரம் படைக்க வா;
விழிப்போடு இரு;
வெறுப்பை மருந்தாக்கு;
பொறுப்பை சிறப்பாக்கு;
பொறாமை இன்றி சுய நலத்தை விட்டு , பொது நலத்தையும் கற்றிடு;
பொறுமை காத்திடு , பெருமை பெற்றிடு
விடியும் பொழுது சிறப்பாகும்.

எழுதியவர் : அ முத்துவேழப்பன் (6-Aug-22, 8:41 am)
பார்வை : 61

மேலே