சிந்தனை செய் மனமே

விழிப் பார்வையில்
படும னைத்து
நடை முறைகளையும்
பார்த்து பகுத்தறிந்து
சிந்தனை செய்மனமே...

சமூகச் சக்கரத்தில்
மனிதர்களுல் உயர்ந்தவர்
தாழ்ந்தவ ரென்ற
ஏற்றத் தாழ்வு
ஏன்....?

ஒருபுரம் பத்துவகை
பட்சணங்கள் உண்ணு
வோருக்காக காத்திருக்க
மறுபுரம் பசிக்கு
பழஞ்சோரும் கிட்டாது
உயிர்விடும் கொடுமை
ஏன்....?

மாளிகைகளில் பஞ்சுமெத்தையில்
துயிலுவோருக்கு நடுவே,
குடியிருக்க குடிசையுமற்று
தெருவோரவீதியில் துயிலுவது
ஏன்....?

அறிவைச் செழுமையாக்கும்
கல்வியிலும் ஏற்றத்தாழ்வு,
பணம்படைத்தோர் நலிந்தவ
ரென்ற பாகுபாடு
ஏன்....?

பண்டிகைக்கால ஆடம்பரத்தில்
பலலட்சம் தூற்றுவோர்க்கிடையே
பட்சணத்திர்க்கும் வழியற்று
பலர்மனம் வெதும்புவது
ஏன்....?

சமூகபாரபட்சம் கண்டு
சீற்றம் கொள்மனதில்,
சிந்தித்தால் வேற்றுமை
களைந்து சீர்படுத்த
வழிபிறக்கும் சிந்தனை
செய் மனமே...!!

அதைவிடுத்து,

சீற்றமெழும் வேளையில்
சிக்கனமாக குரல்கொடுத்து
மனமமைதி அடைந்த
மறுகணமே வயிறுபுடைக்க
உண்டு உறக்கம்
கொண்டால் பாரபட்சம்
களைதலென்பது வெறும்
வாய்ச்சொல் அளவில்
மட்டுமே இயலும்....

நியாயதர்ம ஒழுக்கம்
மனசாட்ச்சி யாவற்றையும்
ஏட்டுக் கல்வியாகவே
இல்லாமல் மனதினில்
ஆழப்பதித்து நடைமுறை
படுத்துவோமே யானால்
சமூகமாற்ற மொருசதவிகித
மாவது தொடக்கம்
கொள்வது திண்ணம்....!!

"சிந்தனை செய் மனமே"

எழுதியவர் : கவி பாரதீ (6-Aug-22, 10:28 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 119

மேலே