தொழிலாளி
ஆழ்கடலில் மூழ்கி முத்துகுளிக்கின்றான்
சூழும் அடர் துன்பங்கள் பொருட்படுத்தாது
நல்முத்துக்கள் ஏராளம் கொண்டு கரைசேர்க்கின்றான்
இவனுக்கு கிடைப்பதோ சொற்ப கூலிமட்டும்
வெடித்தெடுத்த கற்பாறை குகைக்குள் அஞ்சாது
போகின்றான் அங்கு இன்னும் பாறைகளை உடைத்து
அதனுள் ஒண்டிக்கிடக்கும் ரத்தினங்கள் வைரங்கள்
தேடித் தேடி கொணர்ந்து சேர்கின்றான்
இதில் கோடிக்கணக்கில் பணம் ஈட்டும் முதலாளி
இவனுக்கு அளிப்பதோ சொற்பக் கூலியே
வற்றிய நதிகளின் கரையிலிருந்து அள்ளி அள்ளி
மணலை கொள்ளையடிக்கும் கூட்டம் பாவம்
அந்த அள்ளலுக்கும் இவன் பணிதான் வேண்டும்
அள்ளிய மணலுக்கு முதல் ஈட்டியதோ
எண்ணில் அடங்கா பலகோடிகள்
அதில் இவனுக்கு கிடைப்பதோ அற்பம்
தொழிலாளி வர்கம் கேட்பதோ உழைப்புக்கு
ஏற்ற கூலி வாழ்ந்திட கொஞ்சம் வசதி தொழிலாளி இல்லை என்றால் முதலாளி எங்கே
இன்னும் இது தெளிவாக வில்லையே இவர்களுக்கு
எல்லாரும் எல்லாம் பெறவேண்டும் நல்லவையெல்லாம்
எல்லாரும் நல்லவை எல்லாம் பகிர்ந்து வாழ்ந்திடும்
காலம் வரவேண்டும் வரும் காத்திருப்போம்