ஊட்டிவிடும்

கலித்துறை

செய்த புண்ணிய செயலதும் பாவமும் சென்று
எய்தும் பிறப்பினில் இருப்பென வியமது நிற்கும்
பெய்த மழையதின் விளைச்சலை நோக்கிடு இன்று
பொய்யா கருமமு உலகினில் தொடருவ தொன்றே


வியமது = கடைசியில். == எஞ்சி நிற்பது


குறள் வெண்பா

புண்ணிய பாவம் புகுந்திடுமாம் பின்பிறவி
சென்றது நல்லனசெய் யின்று

நேரிசை ஆசிரியப்பா

(ஒழுகிசை அகவல் ஓசை உடையது )

பாவ மென்ற புண்ணிய கருத்தும்
யாரடா அறிந்தார் யாமே கண்டோம்
இளகிய மனதார் காணும் உண்மை
விலக்காம் போர்குணத் தினரறி வதேது
காட்டு வாயா மற்றைய மொழியில்
புண்ணிய மெனும்சொல் லையும்
அந்நிய மொழியும் நாடும றியாறே




......

எழுதியவர் : பழனி ராஜன் (7-Aug-22, 11:21 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 46

மேலே