வாழ்க்கையின் போக்கை புரிந்துகொள்ள முடியவில்லை
வாழ்க்கையின் போக்கை புரிந்துகொள்ள முடியவில்லை
சிறு வயதில் ஏற்பட்ட காயங்கள் இன்னும் ஆறவில்லை
பயந்த சுபாவத்துடன் வளர்ந்து துளி உபயோகம் இல்லை
உடன் பிறந்த அறிவை மேலும் வளர்க்க முடியவில்லை
வாழ்க்கையின் போக்கை புரிந்துகொள்ள முடியவில்லை
பத்தோடு ஒன்று பதினொன்று என்கிற தகுதி சரி இல்லை
இளமையில் உரிய முறையில் கற்காமல் பலன் இல்லை
இளமையில் கற்காவிடில் கலைகள் வளர வாய்ப்பில்லை
உலகத்தின் போக்கை புரிந்துகொள்ளவே முடியவில்லை
பதினாறு வயதில் பதினைந்தை கண்ணடிப்பதற்கில்லை
இந்த வயதில் காமத்தில் மூழ்கினால் வாழ்வதற்கில்லை
எதுவும் இல்லை என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை
வாழ்க்கையின் போக்கை புரிந்துகொள்ள முடியவில்லை
பயந்து படித்தால் நல்ல மதிப்பெண்ணுக்கு வாய்ப்பில்லை
விதியெனும் வில்லன் தாக்கினால் வாழவே வழியில்லை
பதினொன்றாக பிறந்திடில் துன்பத்திற்கு குறைவு இல்லை
வாழ்க்கையின் போக்கை புரிந்துகொள்ள முடியவில்லை
மதிப்பெண்கள் பெற்றும் விதியின் தோழமை பெறவில்லை
கல்லூரி மோசம் என்றால் வருங்காலத்தில் உயர்வில்லை
நண்பர்கள் மோசம் என்றால் உயரிய நட்பு அமைவதில்லை
வாழ்க்கையின் போக்கை புரிந்துகொள்ள முடியவில்லை
அதிக கூச்சம் வெட்கம் என்றால் தாழ்வுக்கு குறைவில்லை
காதலியை கொண்டும் காதலிக்க பயந்தால் வாலிபமில்லை
கையில் சிறிது கூட காசு இல்லையெனில் இன்பம் இல்லை
வாழ்க்கையின் போக்கை புரிந்துகொள்ளவே முடியவில்லை
வேலை கிடைத்தும் அலுவலகத்தில் உயர வாய்ப்பில்லை
ஆளுக்கு ஏற்றமாதிரி பேசும் திறமை எல்லோருக்குமில்லை
தானாகவே புரிந்துகொள்ளவில்லையெனில் ஒன்றுமில்லை
வாழ்க்கையின் போக்கை புரிந்துகொள்ளவே முடியவில்லை
பேசும் திறனில்லாததால் சொந்த ஊரிலேயே இடமில்லை
எங்கோ மூலையில் தூக்கியெறியப்பட்டு சுகமும் இல்லை
விதி சதி செய்து வாட்டுகையில் செய்ய ஒன்றுமே இல்லை
வாழ்க்கையின் போக்கை புரிந்துகொள்ள முடியவில்லை
அலுவலகதில் அவ்வப்போது பணிகள் செய்யாமலில்லை
ஊதியம் கிடைத்தும் ஏனோ மனதில் ஒரு திருப்தி இல்லை
விரும்பும் பணிகளை செய்து திருப்தி காண வழியில்லை
வாழ்க்கையின் போக்கை புரிந்துகொள்ள முடியவில்லை
திருமணம் புரிந்தும் மனம் கிளேஸம் கொள்ளாமலில்லை
பிள்ளைகள் பெற்றபின்னும் முன்னேற்றம் தெரியவில்லை
என்ன இந்த விதி என்ன இந்த விளையாட்டு புரியவில்லை
வாழ்க்கையின் போக்கை புரிந்துகொள்ளவே முடியவில்லை
வேலை பாதி கிடைத்து அதை காலளவு செய்யாமலில்லை
செய்த செய்யாத பணிகளுக்கு சம்பளம் வாங்காமலில்லை
என்ன செய்தும் சிந்தித்தும் நிம்மதி முழுமையாக இல்லை
வாழ்க்கையின் போக்கை புரிந்துகொள்ள முடியவில்லை
எத்தனை பேர்கள் உயர்கிறார்கள் என்று வரம்பே இல்லை
கொள்கை இன்றி கொள்ளை அடித்தும் பலர் ஓய்வதில்லை
நாணயம் கொள்கை கொண்ட எல்லோரும் வாழ்வதில்லை
வாழ்க்கையின் போக்கை புரிந்துகொள்ளவே முடியவில்லை
அறுபதை கடந்தும் ஏதோ ஒன்று,சொல்லத்தெரியவில்லை
அன்பு அமைதி ஆனந்தம் என்று வாழ்ந்தும் அமைதியில்லை
இப்படி ஒரு நபரை நீங்கள் கண்டதுண்டா? இல்லவேயில்லை!
வாழ்க்கையின் போக்கை புரிந்துகொள்ளவே முடியவில்லை...யே?