நிராகரிக்கப்பட்ட கவிதை
👎👎👎👎👎👎👎👎👎👎👎
*நிராகரிகப்பட்ட*
*கவிதைகள்*
படைப்பு *கவிதை ரசிகனன*
குமரேசன்
👎👎👎👎👎👎👎👎👎👎👎
அம்மா!
அன்று
நான்
பக்கத்து வீட்டுப் பையனுக்கு
மிட்டாய் கொடுத்தபோது...
என்னை
நீ பிரம்பால் அடித்து
ஒத்திடம் கொடுக்காமல்
பிரியமாக அனைத்து
முத்தம் கொடுத்திருந்தால்...
நானும்
காமராஜரைப் போல்
வந்திருப்பேனோ என்னவோ...?
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
அம்மா!
எனக்கு
பூச்சூட்டி வளர்த்தாய்
பாலூட்டி வளர்த்தாய்
வளர்த்தாய்
சோறு ஊட்டி வளர்த்தாய்
ஏனம்மா
தன்னம்பிக்கையை
ஊட்டி வளர்க்க
தவறிவிட்டாய்.....?
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
அம்மா !
அன்று
நான்
தப்பு செய்யும்போதெல்லாம்
என் பக்கம் மட்டுமே
பேசாமல்
பொதுவாக நின்று
உண்மை பக்கம் பேசாயிருந்தால்
நான் ஏன்?
இன்று தண்டனை
அனுபவிக்கிறேன்
"சிறையில்"
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
பெற்றோர்களே!
எனக்கு
நீங்கள்
சொத்து சுகத்தை
சேர்த்து வைக்காமல் போனாலும் பரவாயில்லை
தயவு செய்து
சேர்த்து வைத்து விடாதீர்கள்
"பாவத்தை"
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
பெற்றோர்களே!
எத்தனையோ முறை
பல பேரை
எனக்கு
முன் உதரணமாக
காட்டினீர்கள்.....
ஒரு முறையாவது
உங்களை
முன்னுதாரணமாக
காட்டினீர்களா...?
*கவிதை ரசிகன் குமரேசன்*
👎👎👎👎👎👎👎👎👎👎👎