பீர் பாட்டில் ஓட்டம்
இரட்டையர் பிறந்தனர்
இருவரும் ஆண் குழந்தைகள்
தமிழர்கள் யாரும்
அவர்கள் பிள்ளைக்கு
வைக்காத பெயர்களைச்
சூட்டினோம்.
ரன்வீர், ரன்பீர் அழகான பெயர்கள்
சிலர் கேட்கிறார்
'"ரன்பீர்' பீர் பாட்டிலோடு
ஓடுவானா?" என்று.
"'ரன்வீர்' புறமுதுகிட்டு
தப்பியோடும் வீரனா?" என்று.
என்ன சொல்லட்டும்? பிற தமிழர் பொறாமைப்படும்
பெயர்களைச் சூட்டிய பெருமை
எங்களுக்கு.
"ஸ்வீட் நேம்ஸ் சிந்தாபாத்"
என்று சொல்லி வாழ்த்துங்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Ranbir = The brave வாரியோர்
Ranveer = Hero of the batrle