பெண்ணின் அன்பு..!!

பெண்ணே
உன் அன்புக்கு சொந்தமாக
நான் வேண்டும்..!!

காதலனாக அல்லது
கணவனாக ஏன்
உனக்கு காவலனாக
கூட உன் அருகில்
இருக்க வேண்டும்..

புரிந்தால் புன்னகை செய்
புரியவில்லை என்றால்
புருவம் உயர்த்து
புரிந்து கொள்கிறேன் நான்
உனக்கு புரியவில்லை
என்பதை உனக்கு
புரிய வைக்க புதுப்புது
வழிகளை
புரிய முயற்சிக்கிறேன்..!!

எழுதியவர் : (9-Aug-22, 2:27 pm)
பார்வை : 32

மேலே