மது

நீ உள்ளே சென்ற பிறகு தான்..

வானுயர்ந்த இமயமலை
விரல் நுனியில்
அசைத்திட தோனுதடா...

நீ உள்ளே சென்ற பிறகு தான்..
அறியா வயதில்
அரும்பிய காதலெல்லாம்
நினைவாய் மலருதடா..

நீ உள்ளே சென்ற பிறகு தான்..
அக்னி பிளம்பாய்
அவமான வார்த்தைகள்
உடைத்தெறிய தோனுதடா..

நீ உள்ளே சென்ற பிறகு தான்..
கால்கள் கட்டுப்படா
பள்ள மேடறியாது
காயப்பட்டு குருதியாகும்..

நீ உள்ளே சென்ற பிறகு தான்..
சில நேரங்களில்
கலவரம் செய்ய தோணும்
சில நேரங்களில்
கட்டயாய் உறங்கச் செய்யும்..

நீ உள்ளே சென்ற பிறகு தான்..
அண்ணாந்து பார்த்தால்
ஆகாயம் வட்டமடிக்கும்
அமர்ந்த இடத்திலேயே
ஆத்மா ஆகாயம் செல்லும்..

நீ உள்ளே சென்ற பிறகு தான்..
இறுக்கி கட்டப்பட்ட
இடுப்பு வேட்டி
இலகுவாய் உருவியோடும்...

நீ உள்ளே சென்ற பிறகு தான்..
சில நேரங்களில்
அளவு கடந்தால்
ஓராயிரம் முறை
ஒரே வார்த்தை
உச்சரிக்க தோன்றும்..

நீ உள்ளே நுழையும் போது தான்..
தொண்டையும் வயிறும்
எரிச்சலில் துடிக்கும்
காரமும், ஊறுகாயும்
மாமருந்தாய் தோன்றும்..

நீ உள்ளே சென்ற பிறகு தான்..
கஷ்டமோ நஷ்டமோ
கண்ணீர் கரைபுரண்டு ஓடும்
அல்லது எல்லாம்
கடந்து போகும்..

மதுவே...
உன்னை பாடாத
கவிஞரும் இல்லை
உன்னை ஆராதிக்க
கண்ணதாசன் உயிருடன் இல்லை....


#கவிதை

எழுதியவர் : சிபூ (9-Aug-22, 8:48 pm)
சேர்த்தது : சிபூ
Tanglish : mathu
பார்வை : 120

மேலே