விடுதலைத் திருநாள்
விடுதலை விரும்பிப் பெற்றோமே
வெள்ளையன் ஆளிமை ஒழித்தோமே
கொடுமை செய்த அந்நியனை
காந்திய வழியில் தகர்த்தோமே !
நடுங்கிக் கிடந்த வாழ்வுதன்னை
நாட்டில் ஒழித்து மீண்டோமே !
விடுதலைத் திருநாள் மறக்காமல்
நெஞ்சில் நிறைத்து மகிழ்வோமே !
பிழைக்க வந்த அந்நியனோ
விளைவைப் பறித்து ச் சென்றானே !
அழையா விருந்தாய் வந்துவிட்டு
அடிமைச் சிறையில் வைத்தானே !
உழைப்பை உறிஞ்சி கொளுத்தானே
உலகை ஆட்டிப் படைத்தானே
பிழையாய் போன வெள்ளையனை
பேயென ஓட்டி மகிழ்ந்தோமே !
சிட்டுக் குருவி போலின்று
கொஞ்சிக் குலவி கிடக்கின்றோம்
எட்டு மட்டும் பறக்கின்றோம்
எற்றம் பலவும் காண்கின்றோம்
முட்டும் வேதனை இன்றில்லை
மனிதனாய் நாட்டில் இருக்கின்றோம்.
சட்ட திட்டம் வகுத்தின்று
சரித்திரம் படைத்து வாழ்கின்றோம்