கல்கி அவதாரம்
நேர்மை பண்பு ஒழுக்கம் கற்பு
என்ற இச்சொற்கள் புழக்கத்தில் இல்லாமல்
போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை
கலிகாலம் இது ஈனரும் வீணரும்
வாழ நல்லோர் வீழ்வார் நலிவார்
கண்ணன் மீண்டும் வருவான் கல்கி
அவதாரம் எடுத்து நல்லோர் எல்லாம்
மீண்டும் நலம்பெற வாழ துட்டர்
இனம் பூண்டோடு மாய்ந்திட இது
வேத வாக்கு வேதம் பொய்யா மொழி
என்றும் நம்மை காக்கும் இறைவன் வாக்கு