பாப்பா கவிதை
உயர உயர பறக்கும் காற்றாடி
தன்னை மறந்து புள்ளென்றெண்ணி
நினைத்த அக்கணமே காற்றும் வீசாது
நின்றுவிட பாவம் காற்றாடி, வேகமாய்
மண்நோக்கி வந்து மரத்தில் சிக்கி
சின்னாபினம் ஆனதாம் இப்படித்தான்
மனிதன் தன்னையே தெய்வம் என்று
நினைத்து இறுமாப்பில் வாழ்வதும்
என்றறி பாப்பா நீயும்