இயற்கையின் நாளங்கள் நாடிகள்

இயற்கைக்குத்தான் எத்தனை நாளங்கள் நாடிகள்
ஆர்க்கும் கடலலைகள் ஓசையில்
ஓடும் நதிகளின் இரையும் ஓட்டத்தில்
ஓவென்ற இரைச்சலுடன் வீழும் நீர்விழுச்சியில்
ஓவென்று வீசும் காற்றில் பூந்தென்றலில்
பூத்துக் குலுங்கும் சோலையின் பூக்களில்

பச்சைப்புல்லும் மலரும் செழிக்கும் புல்வெளியில்
பனிக்கட்டி உருகும்போது வெள்ளிப்பனி மலையில்
மழைக்கால மேகங்கள் மோத பேரிடிமுழக்கத்தில்
கார்மேகங்கள் இடையே பளிச்சிடும் கொடிமின்னலில்
வயலில் காற்றில் களிநடம் புரியும் நெற்கதிர்களில்

தொட்டால் சிணுங்கும் தொட்டாச்சிணுங்கியில்
வெடிக்கும் எரிமலையில் நில நடுக்கத்தில்
பரவி பின் தானே அடங்கும் காட்டுத்தீயில்
ஆடும் தோகை மயில் ஆட்டத்தில்
துள்ளும் புள்ளிமான் ஓட்டத்தில்
கூவும் சோலைக்கு குயில் ஓசையில்

இப்படி நம்மைச்சுற்றி எங்கும் இயங்கும்
இயற்கையின் நாளங்கள் ஓட்டம் நாடிகள்
இப்படி நம்மைக்காக்க நமக்காக இயங்கும்
இயற்கை ஆடி அடங்கும் யுகம் முடியும்போது

நம்மை அணைத்து வாழவைக்கும் இயற்கை
நாம் ஒன்றி வாழ்ந்தால் உண்டு
கோடி நன்மை நமக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Aug-22, 11:59 am)
பார்வை : 128

மேலே