தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால் தானே தனக்குக் கரி – அறநெறிச்சாரம் 151
இன்னிசை வெண்பா
தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால்
தானே தனக்குக் கரி 151
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
தனக்கு துன்பம் செய்யும் பகைவனும் இன்பம் செய்யும் நட்பினனும் தானேயாவான், பிறரன்று;
தனக்கு மறுமை இன்பத்தையும் இம்மை இன்பத்தையும் செய்துகொள்பவனும் தானே,
தான்செய்த வினைகளின் பயனாக இன்ப துன்பங்களைத் தானே அனுபவித்தலால் தான்செய்த வினைகளுக்குச் சான்றாவானும் தானேயாவன்.