செய்வினை யல்லால் சிறந்தார் பிறரில்லை – அறநெறிச்சாரம் 152

நேரிசை வெண்பா

செய்வினை யல்லால் சிறந்தார் பிறரில்லை
பொய்வினை மற்றைப் பொருளெல்லாம் - மெய்வினவில்
தாயார் மனைவியார் தந்தையார் மக்களார்
நீயார் நினைவாழி நெஞ்சு 152

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

நெஞ்சே! நீ செய்த வினை உனக்குத் துணையாவதன்றி சிறந்த துணைவராவர் பிறரிலர், நிலையானவை யென்று நீ கருதுகின்ற மற்றைப் பொருள்களெல்லாம் அழியுந் தன்மையனவே;

உண்மையையறிய விரும்பிக் கேட்பாயாயின் தாயும் மனைவியும் தந்தையும் மக்களுமாகிய இவர்கள் நின்னோடு எத்தகைய தொடர்பினையுடையார்? அவர்கள் நிலையான தொடர்புடையவர்களா? என்பதை ஆராய்ந்து அறிந்து வாழ்வாயாக!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Aug-22, 10:57 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே