சாதனைகளும் வேதனைகளும்

காந்திஜியின் கொள்கைகளை கொல்வதாக நினைத்து அஹிம்சையையே கொன்றும்
அண்டை நாடுகளின் பகைமையை சமாளிக்கவும்
தேச ஒற்றுமையை நிலைநிறுத்தவும்
வங்கிகளை தேசியமயமாக்கவும்
காங்கிரஸ் அல்லாத கட்சிகளும் தேசத்தை ஆளவும்
பலவிதமான பிரிவினை வாதங்களை எதிர் கொண்டு சமாளிக்கவும்
நாட்டின் இரு பிரதமர்களை பலி கொடுக்கவும்
தாராளமாக்குதலை தாராளமாக்கவும்
விவசாயம் பால் உற்பத்தியில் உலக நாடுகளுடன் போட்டி இடவும்
அணுசக்தி பரிசோதனை செய்து உலகத்தில் வல்லரசு நாடுகளில் ஒன்றாகவும்
ஞாயிறு ஒளர்கதிரில் பாடுபட்டும், திங்கள் குளிர் ஒளியில் உழைத்தும் செவ்வாய் கோளுக்கு மிகவும் குறைந்த செலவில் விண்கலத்தை ஏவி, அதை செவ்வாய் பாதையில் சரியாக இயக்க வைத்தும்
டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கி உலகின் அபிவிருத்தி நாடுகளில் ஒன்றாக செய்தும்
தொடக்க கம்பெனிகள் நூற்றுக்கு மேலாக நிறுவியும்
கறுப்பு பணத்தை ஓரளவுக்கு குறைத்தும்
பெண்களுக்கு மேலும் வளர்ச்சியும் வாய்ப்புக்களும் கிடைக்கச் செய்தும்
கிரிக்கெட் மட்டுமே நம் விளையாட்டு என்ற நிலையை மாற்றி ஹாக்கி, டென்னிஸ், மல்யுத்தம், அம்பு எறிதல், கபடி, சதுரங்கம் போன்ற பல இதர விளையாட்டுகளை ஊக்குவித்தும்
பெண்களுக்கு மேன் மேலும் வாய்ப்புகள் மற்றும் பதவிகள் கொடுத்தும்
விவசாயம் தொழில் வளர்ச்சியில் பல சாதனைகள் படைத்தும்
ஆன்மீகம் என்றால் 'எங்களை விட்டால் ஆளில்லை' என்கிற பெருமையை படைத்தும்...

கடந்த 75 வருட காலத்தில் இந்தியாவில் நடந்த படு ஈரமான செயலும் மற்றும் அருமையான முயற்சிகளும் ஆகும். இருப்பினும்......

இப்போதும் பெண்களுக்கு சம உரிமை தந்தோமா? அனைத்து பெண்களையும் தாய்க்குலமாக நடத்துகிறோமா? கருவிலேயே பெண்ணை அழிக்கும் மனிதாபிமானமற்ற காரியம் செய்வதை முழுதுமாக நிறுத்தினோமா?
நாகரீகம் என்ற பெயரில் நடையிலும் உடையிலும் ஆபாசம் கலக்காமல் இருக்கிறோமா?
வீட்டு வளாகங்களில் நடைபெறும் சுதந்திர தின கொடியேற்றும் விழாவில் அங்கு உள்ளவர்கள் (கொடியேற்றும் நேரத்தில் அங்கு உள்ள) தவறாமல் கலந்து கொள்கின்றோமா?
நம் குழந்தைகளுக்கு அன்பு செலுத்துகிறோம் என்ற பெயரில் மிகச் சிறிய வயதிலேயே அவர்களை அலைபேசிகளுக்கு அடிமை ஆக்குவதை தடுத்தோமா?
நம் நாட்டின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை இன்னமும் நாம் உண்மையில் மனமுவந்து கடைபிடிக்கிறோமா?
சமூக ஊடகங்களில் பிட் ரீல்களை வெளியிடும் போது , நம் சுயகவுரவம், மானம், மரியாதை, மனிதாபிமானம் இவற்றை உண்மையிலேயே கணக்கில் கொண்டு தான் அவற்றை வெளியிடுகிறோமா?
இதுபோன்ற செயல்கள் செய்வதன் மூலம் நாம் உண்மையில், ஒவ்வொரு படி ஏறும் போதும் இரண்டு படிகள் கீழ் இறங்குகிறோம் என்பதை அறிய மறந்தோமா என்று மனம் கவலை கொண்டு துன்பத்தில் அல்லல் படுகிறது...
இந்தியர்களான நாம் மிகவும் பாராட்டுக்கும் பெருமைக்கும் உரியவர்கள், சந்தேகமே இல்லை. ஆயினும் அதே நேரத்தில், முன்னேற்றப் பாதை என்று நினைத்துக் கொண்டு அவ்வப்போது சகதியிலும் சாக்கடையிலும் விழுந்து நம் உடைகளை மற்றும் அல்ல நம் உடமைகளான ஒழுக்கம் மற்றும் நெறி முறைகளையும் அசுத்தப் படுத்திக் கொள்கிறோம் என்பதில் உங்களுக்கு சந்தேகம் இல்லாமல் இருந்தாலும், எனக்கு உறுதியான சந்தேகம் இருக்கிறது.

சுதந்திர தின வாழ்த்துக்கள்!
வந்தே மாதரம்!
ஜெய் ஹிந்த்!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (15-Aug-22, 8:28 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 55

மேலே