ஆகமம் ஓதும் நீங்காது நிலைபெறுமென்று சிவாகமஞ் செப்பும் - உண்மை விளக்கம் 6
திருநெறி 4 – திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளியது.
நேரிசை வெண்பா
குறிகுலிசம் கோகநதம் கொள்சுவத்தி குன்றா
அறுபுள்ளி ஆரமுத விந்துப் – பிறிவின்றி
மண்புனல்தீக் கால்வானம் மன்னும் அடைவேயென்(று)
ஒண்புதல்வா ஆகமம் ஓது. 6
- உண்மை விளக்கம்
பொழிப்புரை:
ஒண் புதல்வா நல்ல மாணவகனே, மண் புனல் தீ கால் வானம் பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாயம் ஆகிய இவற்றிற்கு, அடைவே முறையே குறிகுலிசம், கோகநதம், கொள்சுவத்தி, குன்றா அறுபுள்ளி, ஆர் அமுத விந்து அடையாளம், வச்சிரமும் தாமரைப்பூவும் பொருந்திய சுவத்திகமும், குறையாத அறுபுள்ளியும், பொருந்திய அமுத விந்துவும், பிறிவின்றி மன்னும் என்று ஆகமம் ஓதும் நீங்காது நிலைபெறுமென்று சிவாகமஞ் செப்பும்.