மலர்விழி மனதில் எழுதும் கடிதத்தில்
தென்றல் மலரிதழில்
எழுதிய கடிதத்தில்
தேன்சிந்துது மலர்கள்
மலர்விழி மனதில்
எழுதும் கடிதத்தில்
கவிசிந்துது நெஞ்சம்
==========================================================================
யாப்பு விழைவோருக்கு
தென்றல் மலரிதழ் மேலெழுதும் தும்கடிதம்
தேன்சிந்தும் பூமலர்கள் அன்பில் மகிழ்ந்து
மலர்விழி யாளும் மனதில் எழுதுவாள்
பூங்கவி சிந்துமென்நெஞ் சம்
- -- இப்பொழுது இன்னிசை வெண்பா
இதை விருத்தமாக்க ஒரே அடி எதுகை வேண்டும் . முயல்வோம்
மலரிதழ் மேலெழுதும் தென்றல் ஒருகடிதம்
மலரெல்லாம் தேன்சிந்தும் காதலில் மகிழ்ந்து
மலர்விழியும் மனதிலெழு துவாள்ஓர் கடிதம்
மலர்த்தேன் எனச்சிந்தும் கவிதை என்நெஞ்சில் !
---மலர் என்ற ஒரே அடி எதுகையுடன் பொலிவுடன் நடக்கும் கலிவிருத்தம்
தென்றல் மலரிதழ் மேலெழுதும் தும்கடிதம்
பொன்மலர் தேன்சிந்தி டும்மகிழ்ந்து --அன்பில்
மலர்விழி யாளும் மனதில் எழுத
மலர்க்கவி தைஎன்நெஞ் சில் !
----இப்பொழுது இருவிகற்ப நேரிசை வெண்பா