வாழ்வின் உண்மை

உறவுகளை தேடியதில் உதாசினப்படுத்த பட்டேன்...
அன்பை தேடியதில் அநாதையாக்க பட்டேன்...
நீ என்னை தேடி வா உன்னை கைவிட மாட்டேன் என்றது...
யார் என்று திரும்பி பார்த்தேன்..
சுற்றிலும் தேடினேன்..
தலைகுனிந்து பார் என்றது...
சட்டென்று குனிந்தேன்..
அன்று அதை தலை குனிந்து பார்த்ததால் ...
இன்று தலை நிமிரப்பட்டேன் என்னை அழைத்த புத்தகத்தை ஏந்தி..

எழுதியவர் : கலைச்செல்வி கி (15-Aug-22, 8:22 pm)
சேர்த்தது : கலைச்செல்வி கி
Tanglish : vaazhvin unmai
பார்வை : 233

மேலே