இடைச்சிறுவன் கண்ணன் துதி

இடைச்சிறுவன் நான் கண்ணா ஒன்றும் அறியாதவன்
மழைக்கும் பள்ளிவாசல் ஒதுங்காதவன்
மறை என்ற நாமமும் தெரியாதவன் மிலேச்சன்னான்
ஆவினங்களை கானகத்தில் மேய்க்கும் இடைச்சிறுவன்
கற்றறிவு ஏதுமில்லா நானறிந்த தெல்லாம்
கண்ணா எங்கள் குலக்கொழுந்தாம் உன்நாமம்தான்
ஒன்றுமட்டும் முற்றும் அறிவேன் கண்ணா
அதுவே எம்மாயர் குலத்தவர்க்கு என்றுமெப்போதும்
நீயே தோழன் தாயும் தந்தையும்
மற்றும் குலகுருவும் காவல் தெய்வமும்
எமக்கு உந்தன் பொற்றாமரையே துணை
இறங்கிடுவாய் எம்மைக் காப்பாய் நீயே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Aug-22, 10:23 am)
பார்வை : 16

மேலே