கமலுக்கும் கமலுக்கும் கல்யாணம்
என்னம்மா திருமண அழைப்பிதழ் வந்திருக்குது பாக்கவே இல்லையா?
@@@@@
இல்லங்க. நீங்க படிச்சுச் சொல்லுங்க.
#@@@@@
எங்க அலுவலக மேலாளர் பையனுக்குத் திருமணம்னு சொல்லி அழைப்பிதழைக் குடுத்தாரு. நாந்தான் மறந்துவிட்டேன். குடும்பத்தோட வரச்சொன்னாரு. நீ சொன்னதுக்கப்பறம் தான் பிரிச்சுப் பாக்குறேன்.
@@@@@@
சரிங்க. திருமணம் எப்ப?
@@@@@
வர்ற திங்கள் கிழமை. சரி மணமகன் மணமகள் பேருங்களச் சொல்லுங்க.
@@@@@@@
என்னம்மா இது மணமகன் மணமகள் இரண்டு பேரு பேரும் 'கமல்'.
@@@@@
வடக்கே ஒரு பொண்ணு முறைப்படியான சடங்குகளோட தனக்குத் தானே தாலி கட்டிட்டாளாம். இரு ஆண்கள் திருமணம் செஞ்சுக்கிறதாகவும் இரண்டு பெண்கள் திருமணம் செஞ்சுக்கிறதாகவும் செய்திகள் வெளியாகுது. அது மாதிரி உங்க மேலாளர் பையன் கமல் அவனுக்குப் பிடிச்சு கமல்ங்கிற பேருள்ள பையனைத் திருமணம் செஞ்சுக்குறானோ என்னவோ?
@@@@@@
கொஞ்சம் இரு. கண்ணாடியைப் போட்டுட்டு அழைப்பிதழைப் பாக்கிறேன்.
ஒரு கமலுக்கு முன்னாடி திருநிறைச் செல்வன்னு போட்டுருக்குது. இன்னோரு கமல் பேருக்குப் முன்னாடி திருநிறைச் செல்வினு போட்டிருக்குது. நல்ல வேளை ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் இல்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Kamal = Lotus, Pale red. Unisex name. Iranian, (Persian) Arabian, Indian origin.