பச்சை குத்திக்கலாமோ
ஊமத்தம் பூவா
அரளிப் பாலா நான்
நீ என்னை வெறுத்தோட.
தீயா தேளா நான்
நீ என்னை விட்டு விலகி நடக்க .
பாசானமா விஷ நாகமா நான்
நீ என்னை ஒதுக்கியே வைத்திட
பேயா பிசாசா நான்
நீ என்னிடம் மௌன விரதம் காட்டிட.
நான் மோசமா தோஷமா
போடுவது வேசமா
நீ என் பாசத்தை ஏற்காமல் இருந்திட
நான் ஒட்டுண்ணியா
உயிர்க்கொல்லி நோயா
நீ என்னில் இருந்து
பிரிவினையை விரும்பிட .
கண்ணீர் நதியில் நீந்திய
பெண்மை
சோகம் தீர்க்க நாடினேன் உன்னை
அன்று முதல் உன் மொழியே
தேன் மொழி என நினைத்தேனே
காலமும் நேரமும் உன்னோடு
என்னைக் கொண்டு சேர்க்குமா
கனவுகளும் என் சோகம் தீர்க்குமா .
பச்சைக்கிளி நானோ
உன் இச்சைக்கு ஏங்ககிட
நீயோ உன் நெஞ்சத்தில் என்னை
வஞ்சகியாக விஷச் செடியாக
பச்சை குத்திக்கலாமோ .