கவிஞர் தின கவிதை
விஞானி உருவாக்குவான்
அணுசக்தி உதவியில் ஆக்க சக்தி அணுமின் நிலையங்கள்
அவனே அசுரர் புத்தியில்
'அணுகுண்டும்' உண்டாக்குகிறான்
எதிரிகளை அழிக்க ? யார் எதிரி?
ஒரு நாட்டின் முதல்வன் கையில்
வல்லமை......அவன் நினைத்தால்
நாட்டை காக்கவும் முடியும்
அழிவின் எல்லைக்கும் ....
ஒரே ஒரு சாசனத்தின் கையெழுத்தில் !
"ஹிரோஷிமா' அழிந்தது
அணுகுண்டு தாக்கலில்
ஒரு தலைவரின் கை எழுத்து
ஒரு நாட்டை அழித்தது
பல்லாயிரம் மக்களுடன்
செடி கொடிகளுடன்
எழுதுகோல் (தலைவன்
சாசன பிரகடனம் செய்ய)
அணு சக்தியைவிட
சக்திவாய்ந்தது !!!!
எழுத்தாளன் கையில்
எழுதுகோல்......அவன் எழுத்தும்
மக்கள் மனதை ஆக்கபூர்வமான
மாற்றும் இல்லை அசுரர் எண்ணம்
தந்து அழிக்கும்
எழுத்தாளன் கவிஞனாய்
இருக்கலாம்.....
கவிஞர் தினத்தில்
என் வேண்டுகோள்....
கவிஞர்களே எழுதுங்கள்
பாரதி போல் நல்ல
எண்ணங்கள் வித்தாக்கும்
கவிதைகள்.....ஒருபோதும்
'விகார கவிதைகள்' உருவாக்காதீர்
நல்ல கவிதைகள்
நாட்டிற்கு செல்வம்
வாழ்க கவிஞர்கள்
வளர்க அவர்கள் தொண்டு
'எழுதுகோல் வாளின் கூர்மையைவிட..வலிமையைவிட மேலானது' நினைவில் கொள்ளவும் !!!!!!