அந்தக் கரணம் அடைவே உரைக்கக்கேள் - உண்மை விளக்கம் 16

திருநெறி 4 – திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளியது.
நேரிசை வெண்பா

அந்தக் கரணம் அடைவே உரைக்கக்கேள்
அந்தமனம் புத்தியுடன் ஆங்காரம் – சிந்தையிவை
பற்றியது நிச்சயித்துப் பல்கால் எழுந்திருந்தங்(கு)
உற்றதுசிந் திக்கும் உணர். 16

- உண்மை விளக்கம்

பொழிப்புரை:

அந்தக்கரணங்களை முறையே சொல்லக்கேள்,

அம் மனமும் புத்தியும் அகங்காரமும் சித்தமுமாகிய இவையாம்,

(அவற்றுள் மனம்) பற்றியதனை (புத்தி) நிச்சயித்து, (அகங்காரம்) பலமுறை (அபிமானித்து) எழுந்து (சித்தம்) அங்கே யுற்றதனைச் சிந்திக்குமென்று அறிவாய்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Aug-22, 10:39 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே