தீதறவே வித்தியா தத்துவங்கள் தம்மை விளம்பக்கேள் - உண்மை விளக்கம் 17
திருநெறி 4 – திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளியது.
நேரிசை வெண்பா
ஓதியிடும் நாலாறும் உன்றான்ம தத்துவமென்(று)
ஆதி அருள்நூல் அறையுங்காண் – தீதறவே
வித்தியா தத்துவங்கள் தம்மை விளம்பக்கேள்
உத்தமனே நன்றா உனக்கு. 17
- உண்மை விளக்கம்
பொழிப்புரை:
சொல்லப் பெற்ற இருபத்து நாலும் பொருந்தி ஆன்ம தத்துவமாமென்று சிவாக மநூல் சொல்லும்.
உத்தம மாணாக்கனே! வித்தியா தத்துவங்களை உனக்குக் குற்றமற நன்றாகச் சொல்லக் கேளாய்.