கத்தூரி - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

சொல்லரும் வசியங் காந்தி சுகமுதல் அணுகும் பின்னும்
மெல்லியார் தமக்கு நாத விர்த்தியாந் தலைநோ யேகும்
பல்லுறு கபமுந் தீரும் பகரொணாப் பலமும் உண்டாம்
மல்லடர் சந்நி ரூட்சை மாறுங்கத் தூரிக் கென்னே

- பதார்த்த குண சிந்தாமணி

இது தலைநோய், கபம், சன்னி சுரங்கள் இவற்றை நீக்கி வசியம், உடல் நலம், பெண்களுக்கு நாதவிருத்தி, வன்மை இவற்றை உண்டாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Sep-22, 9:06 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே