நதிக்கரை மணலில்
அதிகாலை வேளை
நதியோர மலர்ச்சோலை
மல்லிவாசம் ஏந்தி
இளந்தென்றல் வீச
நதிக்கரை மணலில்
நடந்து வந்தேன்னான்
மணலில் பதிந்த என்
பாதச் சுவடு கண்டு
களித்தே நதியின் பக்கம்
முன்னேறிச் சென்றனான்
இப்போது என்பாதச்சுவடில்
ஒன்று என்னுடையதாயும்
மற்றொன்று பின்கால்
சுவடாய் வேறெவருடையதாய்
இருக்கக் கண்டேன்
நின்றேன் பெருவியப்பில்
பின் முன்னே நடேந்தேன்
மீண்டும் பாதச்சுவடுகண்டு
வியந்தேன் பயந்தேன் .....
மீண்டும் சுதாரித்துக்கொண்டு
நடந்தேன் நின்றேன் ...........
இப்போது மீண்டும்
என் பாதச்சுவடைப்
பார்த்தேன் .....இப்போது
அவை என்னுடையதாய்
இருக்க.....முன்னே காலை
வைக்கப் பார்த்தேன்
ஏனோ நின்றுவிட்டேன்
என்முன்னே நான் கண்டது
என்னில் திகில் மூட்டியது
ஆம் என்முன்னே
நதிமணலில் புதைமணலில்
ஓர் பறவை மெல்ல மூழ்கி
புதையுண்டு போனது
நான் எப்படி அதில்
வீழாது நின்றேன்
சிந்தித்தேன் புரிந்தது
என்னை புதைமணல்
விளிம்புவரை வந்து
காத்தது ......அந்த
என் ஒற்றைப் பாதத்தோடு
கலந்துவந்த அந்த
புதிய பாதம்
என்னுயிரைக் காத்த
அந்தப் பாதம்
யார்க் பாதச்சுவடு அது ?
அந்த இறைவன் பாதமே
என்று எண்ணி பயந்தேன்
மகிழ்ந்தேன் துதித்தேன் அவனை