அசல்நகல்

உயர உயர அழகாய்ப் பறந்தது
காற்றாடி காற்றின் போக்கில்
எங்கிருந்தோ வந்த பருந்து
காற்றாடி கீழும் மேலும்
கொஞ்சம் பறந்துவந்து பின்னே
அதனைத் தன் அலகால் தீண்ட
கிழிந்தது காற்றாடி வீழ்ந்தது கீழே
'சாயம் வெளுத்தது'
அசல் வேறு நகல் வேறு
இது கதையில் புரிந்தது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Sep-22, 8:48 am)
பார்வை : 100

சிறந்த கவிதைகள்

மேலே