சிங்கப்பல்லு பொண்ணைக் கட்டிவையுங்க
வணக்கம் சோதிடரே.
@@@
வணக்கம், வணக்கம். வாங்க. உங்க பையனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?
@@@@@
அது விசயமாத் தான் வந்திருக்கிறோம். நாங்களும் பல பொண்ணுங்களப் பாத்தோமுங்க. எல்லாம் பொருத்தமில்லை. நீங்க பையன் சாதகத்தைப் பாத்து அவனுக்கு எப்ப திருமணம் நடக்கும். எதாவது பரிகாரம் செய்யணுமானு சொல்லுங்க சோதிடரே.
@@@@@@
பையன் பேரு நரசிம்மன். நரசிம்ம அவதாரத்தில் பத்திக் கேள்விப்பட்டிருப்பீங்க. அதனால் அவனுக்கு பொருத்தமில்லாத பொண்ணைக் கட்டி வச்சீங்கனா பையன் கிட்ட அந்தப் பொண்ணு ரொம்ப நாளு மகிழ்ச்சியா வாழமுடியாது. அவளை பாக்கிற போதெல்லாம் வார்த்தையால் கடிச்சுக் கொதறிவிட்டுடுவான். அவனுக்கு வாயின் வலது பக்கத்தில ஒரு சிங்கப்பல்லு இருக்கணுமே!
@@@@@@
ஆமாங்க சோதிடர் ஐயா.
@@@@@
சரி. அவனுக்கு சிறப்பா கல்யாணம் ஆக ஒரு பரிகாரம் சொல்லறேன் கேளுங்க.
@@@@@@
நீங்க உங்க மகனுக்குப் பாக்கற பொண்ணுக்கும் வாயின் வலது பக்கத்தில ஒரே ஒரு சிங்கப்பல்லு இருக்கிற பொண்ணாப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சா தம்பதிகள் நூறாண்டு எல்லா வளமும் கிடச்சு சந்தோசமா வாழ்வாங்க.
@@@@@@
சரிங்க சோதிடர் ஐயா. நன்றிங்க.
@@@@@
சரி. இரண்டாயிரம் ரூபாயை என் மேசை மேல் இருக்கிற உண்டியல்ல போட்டுட்டுப் போங்க.