குடி பிரியா

ஆணுக்கு பெண் சரிநிகர்
என்பதே பெண்ணுரிமை.
அரசியலில் ஆழமாய்க்
காலூன்றி விட்டோம்

ஊடகத் துறை நிர்வாகம்
விளையாட்டுத் துறையில்
வெற்றி கண்டோம்
மென்பொருள் துறையும்
எங்கள் கைவசம்.

நாங்கள் சிறப்பாகக்
கோலோச்சாத துறை
குடி துறை மட்டுமே
ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டதா
இனிய போதை தரும்
மதுப்பிரியர் எனும் பெயர்.

மெல்ல மெல்ல
மதுப் பிரியாக்கள்
உருவாகி பெருகிவரும்
காலம் கனிந்துவிட்டது
மதுபானக் கடைகள்
எங்களுக்கும் போதைக்கு
தேவையான சொர்க்கம்.

நாகரிக குடியருக்கான
இடம் சென்று குடித்துக்
கும்மாளம் அடிப்போம்
யார் தடுக்க முடியும்
எங்கள் உரிமையை.

ஆடவருக்குச் சமமாய்
போதை தலைக்கேறி
கவிழ்த்து விட்டாலும்
குப்புறப் படுத்து மது
பாட்டிலைப் பிடித்தபடி
கிடப்பதும் தனி சுகம்!

மது அரக்கன் அல்ல
ஆனந்த உலகத்திற்கு
வழிகாட்டும் தேவதை
மதுப் பிரியாக்களும்
மண்ணுலக தேவதைகளே!

எழுதியவர் : மலர் (3-Sep-22, 7:12 am)
சேர்த்தது : மலர்91
Tanglish : kuti priya
பார்வை : 62

மேலே