‌ சிறீமாறா

தம்பி திருமாறா, எப்படா பாட்னாவிலிருந்து வந்த?
@@@@
நேத்து தான் அக்கா வந்தேன். நான் வங்கில எழுத்தரா இருந்து உதவி பதவி உயர்வு கெடச்சு வடக்கு பாட்னா போனேன் இல்லையா?
@@@@@@
சரி. சொல்லு.
@@@@
அங்க போன உடனே அங்கிருந்த வங்கி மேலாளர் முதல் துப்புரவு பணியாளர் வரை யாருமே 'திருமாறன்'ங்கிற பேரைச் சரியா உச்சரிக்க முடியல. எல்லாம் இந்திக்காரங்க. ஆங்கிலம் தெரிஞ்சாக்கூட வேணும்னே இந்தில தான் பேசுவாங்க. நான் இங்கிருக்கும் போதே ஒரு இந்தி ஆசிரியர் மூலமாக இந்தியைப் பேச, எழுத, படிக்கக் கத்துட்டது நல்லதாப் போச்சு.
@@@@#@
சரி நீ வேற என்னவோ சொல்ல வந்தயே அதைச் சொல்லுடா திருமாறா.
@@@@@@@
அந்த அழகான தமிழ்ப் பேரை அங்குள்ளவங்க தைருமாறா, தைருமறா, தைருமாறாசாருன்னு கூப்பிட்டாங்க. எனக்கு எரிச்சலா இருந்துச்சு. என்ன செய்யறது? அதனால எம் பேரை. 'சிறீமாறா'னு அதிகாரப் பூர்வமாக மாத்திட்டேன் அக்கா.
@@@@@
நீ ஆயிரம் சொன்னாலும் நம்ம ஊரில் நீ 'திருமாறன்' தான்டா தம்பி.

எழுதியவர் : மலர் (4-Sep-22, 10:24 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 32

மேலே