செவ்வாய்மென் புன்னகையே

ஞாயிறு என்னும் கதிர்விரி ஓவியம்
திங்கள் எனுமமு தம்பொழி யும்கலசம்
இவ்விரண்டும் கண்களில் ஏந்தி நடந்திடும்
செவ்வாய்மென் புன்னகை யே !
செங்கதிர் ஞாயிறு என்னும்பொன் ஓவியம்
திங்கள் எனுமமு தம்பொழி யும்கலசம்
இவ்விரண்டும் கண்களில் ஏந்தி நடந்திடும்
செவ்வாய்மென் புன்னகை யே
செங்கதிர் ஞாயிறு என்னும்பொன் ஓவியம்
திங்கள் எனுமமு தக்கலசம் -- மங்கையே
இவ்விரண்டும் கண்களில் ஏந்தி நடந்திடும்
செவ்வாய்மென் புன்னகை நீ !
யாப்பு விழைவோர் குறிப்பு :
முறையே பலவிகற்ப இன்னிசை வெண்பா , இருவிகற்ப இன்னிசை
வெண்பா மற்றும் இருவிகற்ப நேரிசை வெண்பா
அழகியல் கவிதை வரிகளாக எல்லோரும் ரசித்துப் படிக்கலாம்
அதற்கு எந்த யாப்பு அறிவும் தேவை இல்லை