இன்னாள் வழக்கு

கொண்டு வந்தால் தந்தை,
கொண்டு வந்தாலும், வராவிட்டாலும் தாய்,
சீர் கொண்டு வந்தால் சகோதரி,
கொலை செய்வாள் பத்தினி,
உயிர்காப்பான் தோழன்,
(முன்னாள் சொல் வழக்கு)

பிள்ளைகளோ வெளிநாட்டில்,
தனிமையில் பாசத்திற்கு ஏங்கித்
தவிக்கும் முது மக்கள்,
முதியோர் இல்லத்துக்கு
பெற்றோரை அனுப்பும் பிள்ளைகள்!
(இன்னாள் வழக்கு)

இது பெரும்பாலான நடைமுறை,
இருக்கும்வரை பணம், பொருள்,
செல்வத்தோடு இரு!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Sep-22, 8:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 67

மேலே