முக்காட்டு முழுநிலவு
மேலோட்டப்
பார்வையிலே கண்டேன்
பூவாட்டம் பெண்ணொருத்தி/
நாவுன்டி நான் பேசிட எத்தனித்தேன்
போனாளே பின் முதுகு காட்டி/
அழகான குட்டி அடடா
எனக்கேற்ற தண்ணித் தொட்டி /
துள்ளியோடாதே கன்னுகுட்டி /
துரத்தியே வந்திடுவான்
இந்தக் கந்தக் குட்டி/
மேனியிலே சூடெறைக்கி
நெஞ்சத்திலே குளிர் மூட்டிடும்
நீதான் அதிசயப் பனிக்கட்டி /
பொண்டாட்டி என அழைத்திட நினைக்கையிலே /
நாவிலே சுருக்கென
இனித்திடும் வெல்லக் கட்டி/
ஓரப் பார்வையில் உரசி
விழியிரண்டையும்
வேர்க்கடலையாய்
அவித்திடும் தீப்பெட்டி /
ஊரைக்
கூட்டி பந்தலொன்று போட்டு /
சொந்தமாக்கிடப் போறேன் தாலி கட்டி/
அரை குறையாய் பார்த்து
விட்டு /
தடம் புரளுது கற்பனை பாதை
தாண்டி /
ஆழ ஆசையைத் தோண்டி
கோலக் கிளியே நகராதே
காளை முகம் காணாமல் /
முக்காட்டு முழுநிலவே
ஏர்க்காட்டு பெண்ணிலவே
கோளை மனம்
கலங்குதம்மா தங்கத் தேரே .
திரை நீக்கி முகம்
காட்டம்மா கன்னி மலரே/