விளக்கொளி
விளக்கொளி
--------------------
கட்டிலில் முடங்கி கிடந்தேன் கம்பளிக்குள்
வெளியே இருட்டு, வானில் அங்கொன்று இங்கொன்றுமாய்
மின்மினிப்பூச்சிபோல் மின்னும் நட்சத்திரங்கள்
குளிர்கால குளிர் என் முதுகெலும்பைத் துளைக்க
கடந்த கால நினைவலைகள் ஒரு நாடகக்
காட்சிபோல் கண்முன் வந்து நின்றன....
எத்தனைக் காதலர்கள் என்னில் சுகம்காண
வந்து போயினர்,......எத்தனைப் பேர்
எத்தனை அதரங்களோடு உறவாடியது என்
அலர்ந்த ஆதாரத்தின் இதழ்கள்....
எத்தனை கைகள் என்தலையை வருடி
என்காதில் காதல் கீதங்கள் பாடின
எத்தனை பரிசுகள்....புகழ் பாடல்கள்...
இன்று இந்த என் மாஜிக் காதலர்
ஒருவர்க்கு கூட நினைவில் எட்டவில்லையே
ஒலி நீக்கிய 'கேசட்' போல என் நினைவு
இப்போது.....
ஒடுங்கிய குன்றிய முதுமையில் நான்
என் இதயத்தில் ஆணி அடித்தாற்போல்
ஓர் உணர்ச்சி..புரியாத ஓர் வலி ....
என்னை உணரவைத்தது.....
கொஞ்சம் விழித்து பார்த்தேன்....
வீட்டு ஜன்னல் கண்ணாடியில் ....
பனிக் கட்டிகள் 'அடித்து' நின்றன...
இவை 'என் மாஜி காதலர் ஆவியா'
மனதிற்குள் ஒரு இறுக்கம்...
எல்லாம் முடிந்த வாழ்க்கை
விஞ்சியது இந்த தோல் போர்த்திய
எலும்புக்கு கூடு.....
ஏன் அன்று எனக்கு ஏற்பட்டது
அந்த காதல் களியாட்டங்கள் .....
என்மேல் எனக்கு ஓர் கசப்பு.
இந்த வாழ்கை கசந்தது....ஏன்
இளமையை மறக்கவைத்தது....
உறக்கம் மெல்ல வந்தடைய ...
கண்ணுக்குள் இப்போது ஒரு
'சுடரொளி' தெரிந்தது ...
வாழ்கை எது புரிந்தது
ஆழ்ந்த உறக்கத்தில் நான்...
( What lips my lips have kissed......poem by Edna St.Vincent Agne ........இந்த கவிதையைத் தழுவியது .....)