உன் மெல்லிய விரல்கள் வழியே உதிர்ந்த மல்லிகை ரோஜா இதழ்களின்
உன் சிவந்த உள்ளங்கையின்
மெல்லிய விரல்கள் வழியே
உதிர்ந்த மல்லிகை ரோஜா இதழ்களின்
நறுமணத்தை முகர்ந்து முகர்ந்து
சாயந்திரத் தென்றல்
என் கவிதையில் கொட்டிச் செல்கின்றது
அவைகள் மணப்பதை சிரிப்பதை
எழுதுகின்ற நானறிவேன்
உன் சிவந்த மெல்லிய விரல்களால்
அதை நீ புரட்டிப் பார்ப்பாயோ
நானறியேன் !