கனவில் வரும் காதல் தேவதையே 555
***கனவில் வரும் காதல் தேவதையே 555 ***
என்னுயிரே...
உன்னை காணுமுன்
இரவெல்லாம் கண்விழித்து...
உறக்கமின்றி தவித்து
கொண்டு இருந்தேன்...
என் நித்திரையை ரசிக்கவே
நீ என் வாழ்வில் வந்தாய்...
நாளெல்லாம் உன்னுடன்
சுற்றி திரிந்தாலும்...
உன்னை ரசிக்க நாட்கள்
போதவில்லை எனக்கு...
இரவு வந்ததும் உறங்க
செல்கிறேன் உனக்கு முன்பு...
நீ தினம் இப்போதெல்லாம்
என் கனவில் வருவதால்...
காதல்
பொழுபோக்கு அல்ல கண்மணி...
காலமெல்லம்
நெஞ்சில் வைத்து சுமக்கும்...
இனிமையான
பரிசம்தான் காதல்...
காற்றோடு கலந்த மலரின்
வாசத்தை எப்படி பிரிப்பது...
என் உயிரில் கலந்த
உன்னையும் பிரிப்பது கடினமடி...
சுவாசிப்பவர்கள் எல்லோரும்
உயிருடன்தான் இருக்கிறார்களா...
உன்னைப்போல உயிரான
உறவோடு வாழ்வதுதான்...
உயிரோடு வாழ்வதற்கு
உண்மை என் உயிரானவளே.....
***முதல்பூ.பெ.மணி.....***