ஒருமுகக் காதல்
என்மனமென்னும் ஆழ்கடலில் அசையாது
மிதந்து செல்லும் அழகு கப்பலடிநீ
உன்மீது இதுவரை ஒருமுகமாய்ச் செல்லும்
என் காதல் அலைகள் உன்பாதம்
வருடுவதையும் பாராது நீயோ கரைத்தேடி
போய்க்கொண்டிருக்கிறாய் சந்திரனை அடைய
முடியாது விரக தாபத்தால் எழும் அலை
கோபத்தால் கரையின் மணலைத் தாக்குவதுபோல்
உண்பாராமுகத்தால் பித்து பிடித்து என்னையே
அந்த கடல் அலைபோல் கண்டேனே நான்