தாய்மடி..!!
நான் தாங்க முடியாத
சொல்லும் சோகமும்
அவள் மடி தாங்கும்
என் மனம் பாரங்களை..!!
எண்ணற்ற வழிகள் இருந்தும்
அவள் என்னை மட்டும்
தேர்ந்தெடுத்தாள் உறவாகவும் உயிராகவும்..!!
எப்போதும் என்னை
அனைத்து செல்பவள்
இப்போது அழுகையுடன்
செல்கிறார் ஏனோ..!!
மறைக்கவும் முடியாமல்
மறுக்கவும் முடியாமல்
என்னை மனதார ஏற்கிறாள்
அவள் மடியோடு
சாய்த்துக் கொள்ள..!!
நரகமும் சொர்க்கமாய் மாறும்
அவள் மடி மட்டும்
அவள் இவள்
இவள் தாய் மட்டும்..!!