தனிமை

தனிமை இனிமையானது !!
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

தனிமையில் கிடைத்திடும் சுகமோ
இனியது /
இனிவரும் காலம் முழுதும்
எளியது /

அப்பனும் அம்மையும் அண்ணனும்
தம்பியும்/
ஒப்பிலாத் தங்கையும் அக்காவும்
துறந்தோம் /

மனைவி என்றொரு மந்திர
வாதியால் /
அனைத்து அன்பை நட்பை
மறந்தோம் /

மழலைச் செல்வங்கள் பிறந்திட
சேர்ந்திட /
மனைவியைக் கூடயாம் மறந்தே
போனோம் /

யாவும் கடந்திடும் நாளும்
வந்தது/
தூய மனதோடு தனியே
மகிழ்வோம்!!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (9-Sep-22, 9:10 pm)
சேர்த்தது : யாதுமறியான்
Tanglish : thanimai
பார்வை : 105

மேலே