ஔவையார்
ஔவையார்.
🌺🌺🌺🌺🌺
அறம்செய விரும்பு என்றநற் கவியே !
மறம்செயும் மார்க்கமும் மன்னவர்க்கு உரைத்தாயே!
அதியனின் நெல்லியோ சாவா மருந்து /
புதியதாம் தமிழோ வாழ்விக்கும் விருந்து /
ஆத்திச் சூடியைச் சூடினாய் நீயே /
போற்றிடும் தூதராய்ப் போனாய்நீ தாயே/
அணுவைப் பிளந்திடும் அறிவியல் உரைத்தவள் /
அணுகிடும் யாரையும் அன்பினால் கவர்ந்தவள்/
செம்மொழி உள்ளவரை வாழ்ந்திடும் ஔவையே/
எம்மொழி ஆயினும் உன்மொழி போற்றுமே!!
-யாதுமறியான்.