காதல் பரிசு
அன்னம்போல் நடந்து வந்தாய் பெண்ணே
என்பார்வைப் பட்டதும் மான்போல் துள்ளி மறைந்தாய்
பின் மறைவிலி ருந்து உன் ஒய்யார மயில்
ஆட்டம் கண்டேன் சகியோடு நீஎன்னைப்
பற்றி பேசி மகிழ்ந்ததைக் கேட்டு என்மேல்
நீகொண்ட காதல் புரிந்தது உன்னழகில்
மயங்கிய நான் உன்னையும் அறிந்தேன்
உன்காதலன் இந்த கவிதைத் தந்தேன்
உன்னழகின் அசைவெல்லாம் இந்த என்
கவிதைக்கு அசையாய் வந்தமைய இதைநீ
ஏற்றுக் கொள்வாயா நம்காதல் முதல்பரிசாய்