ஏமாற்றம்

கரைகள் கோடி இருந்தும்
கடல் தேடுவது ஒற்றை நிலமே
உறவுகள் பல இருந்தும்
உன் பாதசுவடையே தேடினேன்
கண் இமையென காத்திட நினைத்தேன்
கண்ணில் கரையாக கரைந்து போகிறாய்
புவியில் பல உயிர்கள் இருந்தும்
என் உயிரென உன்னை நான் எண்ண
உயிரை உருவி போகிறாய்
எல்லாம் இழந்த குழந்தை போல
கண்கலங்கி நான் நிற்க
ஆறுதல் தரவேண்டிய கரங்கள்
காணாமல் போனதோ
கட்டிவைத்த கனவு கோட்டை
சில்லு சில்லாய் நொறுங்கி போனது
ஏனோ எதற்கோ என பல கேள்வி தணல் தொடுக்க
மனதிற்குள் வலி பொங்க
உன்னை காயப்படுத்த முடியாமல்
என்னை நானே வருத்திக்கொள்ள
ஏனோ என்னை விலகி சென்றாய்
தேவை இதுவே என சொல்லி சென்றிருக்கலாம்
மாயை காட்டி கானல் நீர் ஊற்றி
என்னையே உரமாக்கினாயே
இங்கு நான் என்னோடு கலந்த உறவே நீ என் ஏமாற்றம்

எழுதியவர் : ஹேமாவதி (11-Sep-22, 9:42 am)
சேர்த்தது : hemavathi
Tanglish : yematram
பார்வை : 145

மேலே