நீண்ட நேர மின்வெட்டு

ஓய்வெடுத்து இரவினில்
அயர்ந்து உறங்கலாமா?
உறங்கி விடாதீர்கள்,
விழித்திருங்கள்,
உறக்கத்தை விட விழித்திருப்பது
மேலானது!
இது நமது அரச கட்டளை!
மின்வெட்டு!

யாரும் இரவில்
இளம் சிறார்கள் முதல்
வயது முதிர்ந்த பெரியோர்கள் வரை
உறங்கி விடாதீர்கள்,
விழித்திருங்கள்,
உறங்கி உறங்கி விழித்துக் கொள்ளுங்கள்!
இது நமது அரச கட்டளை!
மின்வெட்டு!

ஒரு மணி நேரத்துக்கு மேல்
உறங்கினால் உடல் நலனுக்கு உகந்ததல்ல,
உறங்கி விடாதீர்கள்,
விழித்திருங்கள்,
வியர்த்து திடீர் திடீரென்று
விழித்துக் கொள்ளுங்கள்,
இது நமது அரச கட்டளை!
மின்வெட்டு!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Sep-22, 4:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
Tanglish : neenda nera minvetu
பார்வை : 49

மேலே