இரவும் பகலும்
நேரிசை வெண்பா
இரவைக் கடவுள் இரகசியம் என்ற
கரவைக் குதவப் படைத்தான் -- இரங்கா
எதையும் பகலாய் வெளிச்சமும் சொல்லும்
புதைக்க எடுபடாக் கூறு
கரவை = வஞ்சனை
முழு கும்மிருட்டு இரகசிய என்றும் அதில் ஆயிரம்
உண்மைகள் வஞ்சனைகள் புதைக்கப் படும் என்பதை
விளக்கவே இரவைப் படைத்தான்
பகலானது புதைக்கும் எதையும் தோண்டி எடுக்கச் செய் யும் என்பதை
விளக்கவே வெளிச்சம் உண்டாக்கி புரிய வைத்தான்
இரவாம் இருட்டு மறைத்தலையும் பகலாம் வெளிச்சம் உண்மையை
வெளிக்கொடுக்கும் என்பதாம்
........