ஆழ்ந்த நீரல காதிக ளளித்திடப் படுவ - கலித்துறை
கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)
(’ழ்’ ‘ய்’ இடையின ஆசு) (‘ந்’ எதுகை)
ஆ’’ழ்ந்த நீரல காதிக ளளித்திடப் படுவ
வா’ய்’ந்த மாமணி யாதிய வயின்றொறு மிறைவ
தா’ழ்’ந்த வாயினு மரியவே லுயர்ந்தவாய்த் தகையும்
வீ’ழ்’ந்த வாயினு மெளியவேற் றாழ்ந்தவாய் விடுமே 45
- திருநாட்டுப் படலம், தணிகைப் புராணம்