நாம் மீண்டும் என்றும் சந்திப்போம் 555

***நாம் மீண்டும் என்றும் சந்திப்போம் 555 ***


என்னுயிரே...


தொட்டுவிடும்
தூரத்தில் நீயும் இல்லை...

உன்னை தொட்டுவிட
முயற்சியும் நான் எடுக்கவில்லை...

மீண்டும்
என்னைத்தொட நீ வருவாய்...

நம்பிக்கையில்
உனக்காக காத்திருக்கிறேன்...

உயிரே உனக்குள்

தொலைத்துவிட்ட என்னை...

நீயே அறிந்தால்
மீண்டும் என்னருகில் வா...

ஆற்றோ
நாணல்
அசையும் போதெல்லாம்...

ஓடிவருகிறது
உன் நினைவுகள்...

என் பேச்சிக்கு நீ ஒவ்வொரு
முறையும் தலையசைக்கும் நினைவுகள்...

புல்லின் மீது பனித்துளி
பார்க்கும் போதெல்லா
ம்...

நீ எனக்காக
சிந்திய நீர் துளி...

உன் இமைகளில்
தேங்கி நின்ற நினைவுகள்...

செங்காந்த
மலரை கண்டாலே...

சாயம் பூசாத
உன் சிவந்த இதழ்கள்...

என்
கண்முன்னே தோன்றுதடி.
..

நான்
பணிக்காக அயல்நாட்டில்...

நீ
படிப்பிற்காக அயல்நாட்டில்...

நாம் மீண்டும்
என்று சந்திப்போம்...

பழைய நினைவுகளோடு
நம் நாட்டில் என்னுயிரே.....


***முதல்பூ.பெ.மணி
.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (12-Sep-22, 5:21 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 313

மேலே