இனிய பெயர் வைப்பேன்
இன்னும் சில நாட்களில்
முதல் மகப்பேறு எனக்கு.
பெண் குழந்தையே
பிறக்க வேண்டுமென்பது
என் தீராத வேண்டுதல்
நெடு மரமாய் வளர்ந்த எனக்கு
பிறக்கும் குழந்தையும்
என்னைப்போல் உயரமாய்
வளர வேண்டுமென்று
இனிக்கும் இந்திப் பெயரான
'பியாலி' யைச் சூட்டுவேன்.
'பியாலி'யை 'பியா'
என்றும் அழைக்க்லாம்.
பியா ஈஸ் ஸ்வீட் நேமென்று
வாழ்த்துங்கள் தமிழர்களே!
Piya Piyali = Tree