அவள் கண்கள்
துள்ளும் கயலோ நீண்ட உன்கண்கள்
கள்ளென ஊறுதே காதல் அதனோரதில்
சொல்லில் அடங்காது உன்கண்ணின் அழகு
ஒரு கவிதையும் போதாது அதைப்பாட =உயிர்
ஓவியமாய் வரைந்திடவா ஓவியனாய் மாறி
காவியம் பாடிடவா கண்ணே உன்கண்களுக்கு
பெண்ணே பெண்ணின் கண்ணின் அழகிற்கே
தனிக் காவியம் படைக்கும்
முதல் கவிஞனாய் நான்மாறி